×

பொன்னமராவதி வட்டாரத்தின் கீழ் தேசிய அளவில் நெல் திருவிழா கண்டுணர்வு பயணம் விவசாயிகள் பங்கேற்பு

பொன்னமராவதி, ஜூன் 11: பொன்னமராவதி வட்டாரத்தின் கீழ் விவசாயிகளை அழைத்துக் கொண்டு தேசிய அளவிலான நெல் திருவிழா கண்டுணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) - மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் கண்டுணர்வு பயணமாக 50 விவசாயிகளை அழைத்துக் கொண்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் கிரியேட் அமைப்பின் கீழ் நடைபெற்ற தேசிய அளவிலான நெல் திருவிழாவில் பங்கேற்கப்பட்டது.

இத்திருவிழாவில் கிரியேட் அமைப்பின் தலைவர் துரைசிங்கம், தலைமை வகித்து பாரம்பரிய நெல்களை மீட்டெடுப்பது குறித்தும், பாரம்பரிய நெல்களின் பயன்பாடுகள், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும், இந்நிகழ்ச்சியில் கிரியேட் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் பொன்னம்பலம், சென்னை நபார்டு வங்கி முதன்மை பொதுமேலாளர் பத்மாரகுநாதன், தஞ்சாவூர் இந்திய உணவு பயிர் பதனீட்டு கழக இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் கிரியேட் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இத்திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், அவற்றின் குணாாதிசயங்கள் மற்றம் பயன்கள் குறித்து வைக்கப்பட்ட கண்காட்சிகள் மிகவும் சிறப்பாக இருந்தது. இத்திருவிழாவில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் 1 விவசாயிக்கு 2 கிலோ வீதம் வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கீழ் பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை மற்றும் அரிமளம் வட்டாரங்களிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இப்பயணத்திற்கு பொன்னமராவதி வட்டார தொழில் நுட்ப மேலாளர், ரவிராஜன், திருமயம் உதவி தொழில் நுட்ப மேளாலர் நவாப்ராஜா ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து அழைத்து சென்று வந்தனர். முன்னதாக புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் அட்மா திட்ட இயக்குநர் சுப்பையா, பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி, புதுக்கோட்டை வேளாண்மை அலுவலர் அன்பரசன் உட்பட பலர் கண்டுனர்வு பயணம் மேற்கொண்டனர்.

Tags : National Rural Fest ,
× RELATED அன்னவாசல் அருகே சூதாடிய 3 பேர் கைது